

தமிழகம் முழுவதும் நிகழாண்டில் 43 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது என மாநில உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் நுகர்பொருள் வாணி பக் கழக மண்டல அலுவலகம், தனியார் அரிசி ஆலையில் நேற்று ஆய்வு மேற்கொண்ட மாநில உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பின்னர், செய்தி யாளர்களிடம் கூறியது:
பொதுமக்களுக்கு ரேஷனில் வழங்கப்படும் பொருட்களை தரமாக வும், எடை குறைவு இல்லாமலும் வழங்க வேண்டும் என முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எனவே, தனியார் அரிசி ஆலை யில், அரசிடமிருந்து பெற்ற நெல்லை தரமான அரிசியாக்கி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு வழங்குகிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்யப் பட்டது.
கொள்முதல் செய்யப்படும் நெல்லில் 17 சதவீதம் ஈரப்பதம் இருக்கலாம். ஆனால், கடந்த ஆண்டு 21 சதவீதம் வரை ஈரப்பதம் இருக்கும் நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடமிருந்து முந்தைய ஆட்சியாளர்கள் அனு மதி வாங்கிய காரணத்தால், சில இடங்களில் அரிசி தரமற்றதாக இருந்தது. அதை தரமான முறையில் மாற்றி வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு காரீப் பருவத்தில் 32 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய அரசு இலக்கு நிர்ணயித்தது, அதையும் தாண்டி 32.40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நிகழாண்டு காரீப் பருவத்தில்(2020 அக்டோபர் முதல் 2021 செப்டம்பர் வரை) 43 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், இதுவரை 34.40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் வரை உள்ள 4 மாதங்களில் அரசு நிர்ணயம் செய்துள்ள 43 லட்சம் டன் நெல்லைவிட கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அடிக்கடி ஏற்படும் இயற்கை பேரிடரில் இருந்து விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை பாதுகாக்கும் விதமாக, சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்றார்.