Published : 18 Jun 2021 03:17 AM
Last Updated : 18 Jun 2021 03:17 AM

8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு :

கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தென்மேற்கு பருவக் காற்று காரணமாக 18-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங் களில் மிதமான மழை பெய்யக் கூடும். வெப்பச்சலனம் காரணமாக 19, 20-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, சென்னை, புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

17-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 21 செமீ, மேல்பவானியில் 12 செமீ, மழை பதிவாகியுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x