சிட்டி யூனியன் வங்கியின் ரூ.1 கோடி நிதியில் - துளசேந்திரபுரம் ஏரியில் தூர் வாரும் பணி :

சிட்டி யூனியன் வங்கியின் ரூ.1 கோடி நிதியில் -  துளசேந்திரபுரம் ஏரியில் தூர் வாரும் பணி :
Updated on
1 min read

சிட்டி யூனியன் வங்கியின் ரூ.1 கோடி நிதி உதவியில் 140 ஏக்கர் பரப்பளவிலான துளசேந்திரபுரம் ஏரியில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணியை நேற்று வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சிட்டி யூனியன் வங்கியின் முதுநிலை மேலாளர் வெங்கடேஸ்வரன், முன்னாள் முதுநிலை மேலாளர் கிருஷ்ணன் ஆகியோர் தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் நிர்வாகிகளுடன் சென்று ஏரியில் ஆய்வு செய்தனர்.

பின்னர், பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது: நடப்பாண்டில் 140 ஏக்கர் பரப்பளவிலான துளசேந்திரபுரம் ஏரியில் சிட்டி யூனியன் வங்கியின் ரூ.1 கோடி நிதி உதவியுடன் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மே 5-ம் தேதி முதல் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்ற ஆண்டை பெருமைப்படுத்தும் விதமாக இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தூர் வாரும் பணி ஜூன் மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் 2017, 2018, 2019, 2020 ஆகிய 4 ஆண்டுகளில் 500 ஏக்கர் பரப்பளவிலான 6 ஏரிகள், 3 குளங்கள், 42 கி.மீ ஆறு மற்றும் பாசன வடிகால்கள் சிட்டி யூனியன் வங்கியின் ரூ.3.90 கோடியில் தூர்வாரப்பட்டுள்ளன என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in