

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த 20 நாட்களுக்கு மேலாக கோயில்கள் திறக்கப்படவில்லை.
இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கோயிலில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு உதவிடும் வகையில் சென்னையைச் சேர்ந்த ஜோதி என்பவர் 300 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மளிகைப் பொருட்களை அனுப்பி வைத்தார். இந்த பொருட்களை கோயில் இணை ஆணையர் எஸ்.மாரிமுத்து நேற்று தொழிலாளர்களுக்கு வழங்கினார். இந்த மளிகை தொகுப்பில் தலா ஒரு கிலோ வீதம் சர்க்கரை, உப்பு, ரவை, கோதுமை மாவு, துவரம் பருப்பு உள்ளிட்டவை இருந்தன.
முன்னதாக அரசின் வழிகாட்டுதலுக்கு இணங்க தொழிலாளர்களுக்கு வெப்பப் பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்து கொண்டு, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் கோயில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.