கரூர் நகராட்சியில் ஒரு சில பகுதிகளுக்கு - 2 நாட்களாக காய்கறி வாகனம் வராததால் மக்கள் அவதி :

கரூர் நகராட்சியில் ஒரு சில பகுதிகளுக்கு  -  2 நாட்களாக காய்கறி வாகனம் வராததால் மக்கள் அவதி :
Updated on
1 min read

கரூர் நகராட்சியில் ஒரு சில பகுதிகளுக்கு 2 நாட்களாக காய்கறி வாகனம் வராததால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் காய்கறி வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது. இதில் மளிகை, காய்கறி கடைகள் செயல்பட அனுமதிக்கப்படாததால், வாகனங்களில் நடமாடும் காய்கறிகள் விற்பனை கடைகள் தொடங்கி வைக்கப்பட்டன. கரூர் மாவட்டத்தில குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் நடமாடும் காய்கறி கடைகள் நேற்று முன்தினம் தொடங்கிவைக்கப்பட்டன.

கரூர் நகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் ஒரு வார்டுக்கு ஒன்றில் இருந்து 3 வாகனங்கள் வரை என 77 வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதில், ஒரு வாகனம் மட்டுமே ஒதுக்கப்பட்ட வார்டுகளில் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே வாகனம் செல்வதால், மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் காய்கறி வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்படி, கருப்பகவுண்டன்புதூர், தாந்தோணிமலை வெங்கடேஸ்வரா நகர் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு கடந்த 2 நாட்களாக காய்கறி வாகனம் வராததால், அப்பகுதி மக்கள் அவதியடைந்துள்ளனர். எனவே ஒரு வார்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நடமாடும் காய்கறி வாகனத்தை அந்த வார்டின் அனைத்து பகுதிக்கும் சென்று வர நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது காய்கறி வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in