

நாமக்கல் மாவட்ட மனநல திட்டம் சார்பில் திருச்செங் கோடு அரசு தலைமை மருத்துவமனையில் செவி லியர்களுக்கு மன நல பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட மனநல மருத்துவர் முகிலரசி தலைமை வகித்துப் பேசியதாவது:
பயம், பதற்றம் என்பது எல்லாவித நோய்களிலும் ஒரு அறிகுறியாக தோன்றினாலும் சில சமயம் அதுவே ஒரு தனி நோயாக மனிதனை ஆக்கிர மித்துக் கொள்கிறது. தலை முதல் கால் வரை இதன் வெளிப்பாடுகள் அறிகுறி களாக அமையும். தலையில், நெற்றியில் வியர்வை, லேசான தலைவலி, கண்களில் எரிச்சல், கண்களில் வீக்கம், மூக்கில் சுவாசத்தில் மாற்றம், மூக்கு விடைப்பு, உதடுகள் காய்ந்து போகும், நாக்கு உலர்ந்து போகும், தொண்டையில் ஏதோ அடைத்தது போலிருக்கும், கைகளில் லேசான நடுக்கம் ஏற்படும். பொதுவாக எதிர் பார்ப்பும், எதிர்பார்ப்புக்கு ஏற்ற தயார் நிலையில் இல்லாத போதும் தான் பதற்றம் உருவாகிறது.
இதற்கு சிகிச்சை முறைகள் யாவுமே இறுக்கத்தை தளர்த் தவும், மனதை வலுப் படுத்தவும் முனைகின்றன. தியானம், யோகா,மூச்சுப் பயிற்சிகள் இறுக்கம் தளரவும், மனதில் அமைதி நிலவவும் உதவும். மன அழுத்தத்தை குறைக்க டிரஸ் பால் பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோல், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்ட மனநலத்திட்டம் சார்பில் மன நல விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. மருத்துவமனை தலைமை மருத்துவர் பாரதி தலைமை வகித்தார். மனநல மருத்துவர் ஜெயந்தி மனநலம் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கிப் பேசினார். இதில், செவிலியர்கள், மன நல ஆலோசகர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.