

ஊத்தங்கரை அரசு மருத்து வமனையில் கரோனா சிகிச்சை பிரிவு தொடங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை மூலம் ஊத்தங்கரை சுற்று வட்டாரப் பகுதி மக்களின் மருத்துவ தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. உள் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறவும் இங்கு வசதி உள்ளது.
இதற்கிடையில், ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளில் கரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்காக சிகிச்சை பெற கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது.மேலும், இங்கு கடந்த ஆண்டில் 15 படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் கரோனா சிகிச்சைக்கான சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டிருந்தது தற்போது, தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பிரிவை தொடங்க வேண்டும். மேலும், கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.