

தூத்துக்குடி அருகேயுள்ள ஆரோக்கியபுரம் சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(35). இவர் நேற்று சிலுவைப்பட்டி சந்திப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை மறித்து மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சரண்யா வழக்கு பதிவு செய்து, முத்துக்குமாரை கைது செய்தார். கைது செய்யப்பட்டுள்ள முத்துக்குமார் மீது தூத்துக்குடி மத்திய பாகம் மற்றும் தாளமுத்துநகர் காவல் நிலையங்களில் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.