Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM

பென்னாகரத்தில் 8 மி.மீ மழை :

தருமபுரி மாவட்டம் பென்னா கரத்தில் நேற்று முன் தினம் இரவு 8 மி. மீட்டர் மழை பதிவானது.

தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை மழைக்கான அறிகுறியுடன் வானம் காணப்பட்டது. தொடர்ந்து குளிர்ச்சியான காற்று வீசத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மாவட்டத்தில் சில பகுதிகளில் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பென்னாகரம் பகுதியில் 8 மி.மீட்டர் மழை பதிவானது. அதேபோல, ஒகேனக்கல் பகுதியில் 5 மி.மீட்டர் மழை பதிவானது. இதுதவிர, மாவட்டத்தின் இதர பகுதிகளில் லேசான தூறலை மட்டுமே காண முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x