

கோயில் நிர்வாகத்தை பக்தர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி தஞ்சாவூரில் நேற்று நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள் ளது என இந்து மக்கள் கட்சி தலை வர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
தஞ்சாவூர் ரயிலடியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கோயில் நிர்வாகத்தை பக் தர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அரசு மற்றும் அரசியல் கலப்பு இல்லாமல் அறவோர் வாரியம் அமைக்கப்பட்டு, கோயில்கள் நிர்வாகம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி மடாதிபதிகள், ஆதீனங்கள், இந்து சமயத் தலைவர்கள் பங்கேற்கக்கூடிய வகையில், தஞ்சாவூரில் மே 8-ம் தேதி உண்ணாவிரதப் போராட் டத்தை நடத்தத் திட்டமிட்டு, காவல் துறையினரிடம் அனுமதி கோரியிருந்தோம்.
இந்த கரோனா பெருந்தொற் றைக் காரணம் காட்டி, அப்போராட்டத்துக்கு தடை விதிக்கப்பட் டுள்ளது. கரோனா தடுப்புப் பணியில் அரசுக்கு முழுமை யான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, நாங்களும் இந்நிகழ்ச் சியை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளோம். தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலி னுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கி றோம். அரசு, அரசியல் கலப்பு இல்லாத ஆன்மிகவாதிகள் கொண்ட ஓர் அமைப்பு மூலமாக கோயில் நிர்வாகம் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சேகர் பாபுவுக்கு அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க உள்ளோம் என்றார்.
அப்போது, அக்கட்சியின் இளைஞரணி மாநில பொதுச் செயலாளர் டி.குருமூர்த்தி, செயலாளர் பி.கார்த்திக்ராவ் போன்ஸ்லே உள்ளிட்டோர் உடனிருந்தனர்.