

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக் கும் அரசுப் போக்குவரத்துக் கழகங் களுக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட ஏஐடியுசி ஓய்வுபெற்றோர் தொழிற் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை, ஏஐடியுசி போக்குவரத்து சம்மேளன மாநில துணைத் தலைவர் துரை.மதி வாணன் ஆகியோர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று அனுப்பியுள்ள மனுவில் கூறி யிருப்பதாவது:
தமிழகத்தில் பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சி அமைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தொழிலாளர் நலத் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள சி.வி.கணேச னுக்கும், போக்குவரத்துத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ராஜகண்ணப்பனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அறிவிப்பு வெளியிட்ட முதல்வருக்கு நன் றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடந்த 10 ஆண்டுகளாக கடுமையான நிதி நெருக் கடிக்கு உள்ளாகி யுள்ளது. வருவாய்க்கும் செலவினத்துக்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தொழிலாளர்களும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களும் தங்களுடைய பணப் பலன் களையும், உரிமை களையும் இழந்து வருகின்றனர். இவற்றை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங் களுக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்யவும், பயண சேவையை மேம்படுத்த வும், போக்குவரத்துக் கழகத்தைப் பாதுகாக்கவும் வேண்டுகிறோம்.
அதேபோல, போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தம், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றவும், ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் ஓய்வுபெறும் நாளன்றே அவர்களுடைய பலன்களைப் பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 65 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை வழங்குவது டன், அகவிலைப்படி உயர்வை ஓய்வூதியத்துடன் இணைத்து வழங்க வேண் டும். பணியின்போது உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக வாரிசு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.