Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM

சிறுமி பாலியல் பலாத்கார புகார் - குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் திண்டுக்கல், தேனியில் நாளை விசாரணை :

திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராமம், மற்றும் தேனியில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நாளை (மே 7) விசாரணை நடத்த உள்ளது.

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் 2013-ல் உருவாக்கப்பட்டது. தலை வர் மற்றும் 6 உறுப்பினர்களை கொண்டு இந்த ஆணையம் இயங்கி வருகிறது. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டச் செயலாக்கங்களை கண்காணிக் கும் பொறுப்பை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு கேரளா வழக்கறிஞர் ஒருவர் ஒரு புகார் மனுவை அனுப்பினார். அதில் தேனி மாவட்டம், நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை சிலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் கர்ப்பமுற்ற அந்தப் பெண்ணுக்கு பிரசவம் நடந்த போது அப்பெண் இறந்து விட்டார் என்று தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து 2 வாரங்களில் இதனை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக் கொண்டது. இதனடிப் படையில் நாளை (வெள்ளிக் கிழமை) குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் திண் டுக்கல், தேனி மாவட்டங்களில் விசாரணை நடத்த உள்ளது.

இதுகுறித்து மாநிலக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் வீ.ராமராஜ் கூறியதாவது: சம்பந்தப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஆபாசப் படம் எடுத்து மிரட்டப்பட்டுள்ளார். பிரசவத்தில் இவர் இறந்ததால், பிறந்த குழந்தை காந்தி கிராம தத்தெடுப்பு மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் இதுவரை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வில்லை. முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில், ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் அமர்வுக் குழு காந்தி கிராமம் மற்றும் தேனிக்கு விசாரணைக்காக நாளை வர உள் ளது.

அன்று காலை 9 மணிக்கு காந்தி கிராமத் தத்தெடுப்பு மையத்தில் சம்பந்தப்பட்ட குழந்தையின் உடல் நலம், பாதுகாப்பு குறித்து விசாரிக்கிறது. அங்குள்ள அனைத்து குழந்தைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும். பின்பு 11 மணிக்கு தேனி ஆட்சியர் அலுவலகத்தில் சிறுமியின் பிரச்சினையைக் கையாண்ட சைல்டு லைன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு குழு, நன்னடத்தை அலுவலர் மற்றும் போலீஸாரிடம் விசாரணை நடத்தப்படும் என்றார்.

இந்த விசாரணை அறிக்கை தேசிய மனித உரிமை ஆணை யத்துக்கு சில நாட்களில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இக்குழுவிடம் குழந்தைகள் தொடர்பான வழக் குகள், பிரச்சினைகள் குறித்த மனுக்களையும் பொதுமக்கள் அளிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x