Published : 05 May 2021 03:13 am

Updated : 05 May 2021 03:13 am

 

Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

கரோனா ஊரடங்கு அறிவிப்பால் - வாழ்வாதாரத்தை இழந்த சாலையோர வியாபாரிகள் :

கரோனா ஊரடங்கால், ஆழியாறு அணைப் பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகளின்றி வெறிச்சோடி காணப்பட்ட சாலையோரக் கடைகள்.

பொள்ளாச்சி

கோவை மாவட்டத்தில் உள்ள மலைவாழிட சுற்றுலாதலமான வால்பாறைக்கு, தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். வால்பாறைக்கு செல்லும் வழியில் ஆழியாறு அணைப் பூங்கா, குரங்கு அருவி, வண்ணமீன் காட்சியகம் ஆகியவற்றுக்கும் சுற்றுலா பயணி கள் செல்வதால், ஆழியாறு அணைப்பகுதியில் மீன் உணவு கடைகள், இளநீர் கடை உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டிக் கடைகள் சாலையோரங்களில் அமைக்கப்பட்டு இருந்தன. கரோனா இரண்டாம் அலை காரண மாக சுற்றுலா தலங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், ஆழியாறு அணை பூங்கா, குரங்கு அருவி ஆகியவை மூடப்பட்டன. இதனால்சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள் ளது. சாலையோர வியாபாரிகள் பலர், பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்ய சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயத் தோட்டங்களுக்கு கூலி வேலை களுக்கு செல்கின்றனர்.

இதுகுறித்து சாலையோர வியாபாரிகள் சிலர் கூறும்போது, ‘‘சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால், சாலையோர தள்ளுவண்டிக்கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளோம். கடந்த ஆண்டைப்போல, இந்த ஆண்டும் ஊரடங்கின்போது வியாபாரிகளுக்கு கடனுதவி மற்றும் நிவாரணத் தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x