Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

தருமபுரி மாவட்டத்திலேயே - பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி வேட்பாளர் : அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி :

தருமபுரி மாவட்டத்தில் இதர 4 தொகுதிகளைக் காட்டிலும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் என 5 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. 2021 தமிழக சட்டப் பேரவை தேர்தலில், 5 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர். பாலக்கோடு தொகுதியில் முன்னாள் அமைச்சரான கே.பி.அன்பழகனும் (அதிமுக), பென்னாகரத்தில் ஜி.கே.மணியும் (பாமக), தருமபுரியில் வெங்கடேஸ்வரனும் (பாமக), பாப்பிரெட்டிப்பட்டியில் கோவிந்தசாமியும் (அதிமுக), அரூரில் சம்பத்குமாரும் (அதிமுக) வெற்றி பெற்றுள்ளனர். இந்த 5 வெற்றி வேட்பாளர்களில் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி ஆவார். இவர் 1 லட்சத்து 14 ஆயிரத்து 507 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளரை விட 36943 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல, அரூர் தொகுதி அதிமுக வேட்பாளர், திமுக வேட்பாளரை விட 30392 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். பாலக்கோடு அதிமுக வேட்பாளர், திமுக வேட்பாளரை விட 28 ஆயிரத்து 100 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தருமபுரி பாமக வேட்பாளர், திமுக வேட்பாளரைவிட 26 ஆயிரத்து 860 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.

பென்னாகரம் தொகுதி பாமக வேட்பாளர், திமுக வேட்பாளரைவிட 21 ஆயிரத்து 186 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். இந்த 5 வெற்றி வேட்பாளர்களில் பாப்பிரெட்டிப்பட்டி வேட்பாளர் கோவிந்தசாமியின் வெற்றிக்கான வாக்குகள் வித்தியாசம் மாவட் டத்தில் முதலிடம் பெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x