விளாத்திகுளம் தொகுதியில் - 25 ஆண்டுகளுக்கு பின் திமுக வெற்றி :

விளாத்திகுளம் தொகுதியில்  -  25 ஆண்டுகளுக்கு பின் திமுக வெற்றி   :
Updated on
1 min read

விளாத்திகுளம் தொகுதியில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக வெற்றி பெற்றுள்ளது.

விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.சின்னப்பன், திமுக வேட்பாளர் வி.மார்க்கண்டேயன், அமமுக வேட்பாளர் க.சீனிச்செல்வி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாலாஜி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சே.வில்சன், புதிய தமிழகம் வேட்பாளர் சி.முத்துக்குமார் உள்ளிட்ட 15 பேர் போட்டியிட்டனர்.

இதில், அதிமுக, திமுக வேட்பாளர்கள் இடையே தான் போட்டிநிலவியது. கடந்த 1977 முதல் 2016 வரை நடைபெற்ற மொத்தம் 11 தேர்தல்களில் 1977, 1980, 1989, 1991, 2001, 2006, 2011, 2016 ஆகிய 8 சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களில் விளாத்திகுளம் தொகுதியில் அதிமுகவே வெற்றிபெற்றது. கடும் சவால்களுக்கு இடையே 2019-ல் நடந்த இடைத்தேர்தலில் 9-வது முறையாகவும் விளாத்திகுளத்தில் அதிமுகவெற்றிபெற்றது.தற்போது நடந்துமுடிந்த பொதுத்தேர்தலில் திமுகவேட்பாளர் வி.மார்க்கண்டேயன் 90,348 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் பி.சின்னப்பன் 51,799 வாக்குகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தார்.

கடந்த 1996-ம் ஆண்டு தேர்தலில்திமுக வெற்றி பெற்றதற்கு பின்னால், சுமார் 25 ஆண்டுகள் கடந்துதிமுக மீண்டும் வெற்றிபெற்று விளாத்திகுளம் தொகுதியில் தனதுகணக்கை தொடங்கியுள்ளது. விளாத்திகுளம் தொகுதியில்வெற்றிபெற்ற வி.மார்க்கண்டே யனுக்கு, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அபுல்காசிம் சான்றிதழ் வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in