Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

3-ம் இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி :

கோவில்பட்டி

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உட்பட 17 வேட்பாளர்கள் களம் கண்டனர். இதில், திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த எம்.வைகுண்டமாரி 22,413 வாக்குகள் பெற்று 3-வது இடத்தை பிடித்தார். இதேபோல், விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதியில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆர்.பாலாஜி 11,828 வாக்குகள் பெற்று 3-வது இடத்தை பிடித் தார்.

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.கோமதி 9,213 வாக்குகள் பெற்று 4-வது இடத்தை பிடித்தார். கடந்த தேர்தல்களை விட இம்முறை நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகள் பெற்றுள்ளதால், அக்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x