Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

விபத்தில் ஜோதிடர் மரணம் :

கோவில்பட்டி ராஜீவ் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் திலக்(43). ஜோதிடரான இவர், கடந்த 1-ம் தேதி மாலை குருமலை அருகே வெங்கடேஸ்வரபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, இரவு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

குருமலை சாலை குமாரபுரம் காலனி அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து காயமடைந்தார். கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார். நாலாட்டின் புத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x