Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

கலசப்பாக்கம், செய்யாறு தொகுதிகளில் - 20 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வெற்றி :

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் மற்றும் செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவைச் சேர்ந்தவர்கள் தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைய வுள்ளனர்.

முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி காலம் முதல், திமுகவின் கோட்டையாக கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி திகழ்கிறது. திமுகவின் ஆதிக்கம் அதிகம் உள்ள தொகுதி. கடந்த 1996-ல் போட்டியிட்டு திமுக வெற்றி கண்டது. பெ.சு.திருவேங்கடம் 4 முறையாக வெற்றி பெற்றார். பின்னர், 2001-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும், உட்கட்சி பூசலால், கூட்டணி கட்சிகளுக்கு திமுக விட்டுக் கொடுத்தது.

இந்த தொகுதியை கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற கோரிக்கை வலுத்தது. அதன் எதிரொலியாக, கலசப்பாக்கம் தொகுதியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு திமுக போட்டியிட்டது.

இதில் 9,222 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி வாகை சூடியது. 4 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த பெ.சு.திருவேங்கடத்தின் மகன் சரவணன், முதன் முறை யாக வெற்றி பெற்றுள்ளார். 20 ஆண்டுகளுக்கு பிறகு தந்தையை தொடர்ந்து, தமிழக சட்டப் பேரவைக்குள் திமுக சார்பில் சரவணன் நுழைகிறார்.

உதயசூரியன் உதித்தது

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் செல்வாக்கு பெற்றிருந்த திமுக, கடந்த 1996-ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. பின்னர், 2001-ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை கண்டது. அதன் பிறகு, 3 முறை கூட்டணி கட்சி யான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக் கியது.

இதனால் திமுகவினர் அதிருப்தி அடைந்திருந்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய காணொலி கலந்தாய்வு கூட்டத்தில், செய்யாறு தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும், உதயசூரியன் உதிக்க வேண்டும் என நேரிடையாக வலியுறுத்தினர். இதன் எதிரொலியாக, செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு திமுக போட்டியிட்டது. வாக்கு எண்ணிக் கையில் தொடக்கத்தில் அதிமுக முன்னிலை பெற்று வந்தாலும், 14 சுற்றில் இருந்து திமுகவின் ஆதிக்கம் தொடங்கியது.

இறுதியாக, 12,271 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது. இதன்மூலம், செய் யாறு தொகுதியில் இருந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு, திமுகவைச் சேர்ந்த ஜோதி, தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைகிறார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x