விருதுநகர் வாக்கு எண்ணும் மையத்தில் : தேர்தல் பார்வையாளர்கள் திடீர் ஆய்வு :

விருதுநகரில் வாக்கு எண்ணிக்கை மையமான வித்யா பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுசெய்யும் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான இரா.கண்ணன் மற்றும் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள்.

Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், வில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய 7 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி  வித்யா கல்லூரியில் நடைபெறுகிறது. இங்கு வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா. கண்ணன், வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் பிரபான்ஷ குமார் வஸ்தவ் (சாத்தூர்) பினித்தாபெக்கு (விருதுநகர்), சுரேந்திர பிரசாத்சிங் (திருச்சுழி), குல்சார் அகமதுதர் (ராஜபாளையம்), முகமது அக்பர்வாணி (சிவகாசி), ஜி.ஆர்.கராத் (அருப்புக்கோட்டை), ஜெயமோகன் ( வில்லிபுத்தூர்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.பெருமாள் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வாக்கு எண்ணும் மையத்தில் தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த அறையில் வாக்குகளை எண்ணத் தேவையான வசதி செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in