Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால், பெரம்பலூர், அரியலூரில் - தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா கொடியேற்றம் :

தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுறை, திருவாரூர், காரைக்கால், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங் களில் பல் ேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது.

மே தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஏஐடியுசி தொழிற் சங்கத்தின் சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி தஞ்சாவூர் கரந்தை போக்கு வரத்துக் கழக புறநகர் கிளை முன்பு மத்திய சங்க பொதுச் செயலாளர் டி.கஸ்தூரி தலைமையில் நேற்று நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடியை மாவட்டச் செய லாளர் முத்து.உத்திராபதியும், ஏஐடியுசி சார்பில் மே தின கொடியை மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமாரும் ஏற்றினர். நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு ஏஐடியுசி மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜ் தலைமையில் மே தின கொடியேற்றப்பட்டது.

கும்பகோணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர அலு வலகத்தில் நகரச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன் மே தின கொடியேற்றினார். இதேபோல, கும்ப கோணம் நகரில் 40 இடங்களில் சிஐடியு சார்பில் மே தின கொடியேற்றம் நடைபெற்றது.

கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், நகரச் செயலாளர் ஆர்.மதியழகன் தலைமையில், மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி கொடியேற்றினார்.

நாகை, மயிலாடுதுறையில்...

நாகை தொழிற்சங்க கூட்ட மைப்பு சார்பில், நாகை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கொடியை அச்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் மா.ராணி, அகில இந்திய மாநில அரசு ஊழி யர் சம்மேளனக் கொடியை நாகை தொழிற்சங்க கூட்டமைப்புத் தலைவர் சு.சிவகுமார் ஆகியோர் ஏற்றினர்.

மயிலாடுதுறை பொது தொழிலா ளர் சங்க அலுவலகத்தில், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் நேற்று மே தின கொடியேற்றினார். இதேபோல, நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் அனைத்து தொழிற்சங்கங்கள், அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் நேற்று மே தின விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில்...

திருவாரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி அலுவலகத் தில் தொழிற்சங்க நிர்வாகி தாயுமானவனும், திருத்துறைப் பூண்டி அலுவலகத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜனும் தொழிற்சங்க கொடியேற்றினர்.

மன்னார்குடி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக துணை மேலாளர் அலுவலகம் முன்பு ஐஎன்டியுசி சார்பில் தொழிற்சங்கக் கொடியை அச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாண்டியன், அமைப்புச் செயலாளர் ராஜிவ் காந்தி முன்னிலையில், மண்டல அமைப்புச் செயலாளர் முருகேசன் ஏற்றினார்.

காரைக்காலில்...

காரைக்காலில் உள்ள மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தமீம் முன்னிலையில், மாநில செயற்குழு உறுப்பினர் அ.வின்சென்ட் கட்சிக் கொடி யேற்றினார். காரை பிரதேச அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில், காரைக்கால் அரசு ஊழியர் சம்மேளன அலுவலகம் உட்பட பல இடங்களில் சம்மேளனத் தலைவர் சுப்ரமணியன் மே தின கொடியேற்றினார். பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், பொருளாளர் மயில்வாகனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில்...

பெரம்பலூர் மாவட்டத்தில் துறைமங்கலத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லத்துரை கொடியேற்றினார். சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் புதிய பேருந்து நிலைய ஆட்டோ சங்கக் கிளையில் எஸ்.அகஸ்டின் கொடியேற்றினார். இதேபோல, பழைய பேருந்து நிலைய ஆட்டோ சங்க கிளை, காய்கறி மார்க்கெட், அரசு மருத்துவமனை திருநகர் கிளை, மின் ஊழியர் மத்திய அமைப்பு கிளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விடுதலைச் சிறுத்தைகள் தொழிலாளர் விடுதலை முன் னணி, புதிய பேருந்து நிலைய நடைபாதை வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மாநில துணைச் செயலாளர் இரா.சீனிவாசராவ் இனிப்புகள் மற்றும் முகக்கவசம் வழங்கினார். இதில், வியாபாரிகள் சங்கத்தலைவர் ராமச்சந்திரன், பொருளாளர் சுப்பிரமணியன், செயலாளர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரசு மருத்துவத் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் மாவட்டத் தலைவர் ஏ.ராஜகோபால் தலை மையில், மாவட்டச் செயலாளர் எம்.மகாலட்சுமி தொழிற்சங்கக் கொடியேற்றினார்.

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, ஆலத்தூர் வட்டம் நாட்டார்மங்கலம் கிராமத்தில் நம்மால் முடியும் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் விவசாயிகளுக்கு மா, கொய்யா, எலுமிச்சை, நெல்லிக்கனி, புங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் மற்றும் மூலிகைச் செடிகளை வழங்கினர்.

அரியலூர் மாவட்டத்தில்...

அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஏஐடியுசி சார்பில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் டி.தண்டபாணி, தொழிலாளர் சங்கக் கொடியை ஏற்றினார். சங்க கிளைச் செயலாளர் எஸ்.மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x