

தூத்துக்குடி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.200, சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 367 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.73,400 அபராதம் விதிக்கப்பட் டுள்ளது.
சமூக இடைவெளி கடைபிடிக்காத 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.