

சாத்தான்குளத்தில் திருமண விழாவில் அரிவாளுடன் நடனமாடிய 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் சத்யபாமாவின் வாட்ஸ் அப் எண்ணுக்கு, சாத்தான்குளம் தனியார் மண்டபத்தில் நடந்த திருமண விழாவில் சிலர் அரிவாளுடன் நடனமாடும் வீடியோ வந்தது. இதையடுத்து அவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில், சாத்தான்குளம் தைக்கா தெருவைச் சேர்ந்தசெல்லப்பா, கிங்ஸ்டன் உள்ளிட்ட 5 பேர் எனத்தெரியவந்தது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களுடன் நடனமாடியது தொடர்பாக அவர்கள் 5 பேர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.