

பெரியதாழை கீழத்தெருவைச் சேர்ந்த ஜான்சன் மகன் அமில்டன் (24). இவர் 3 மீனவர்களுடன் கடந்த 28-ம் தேதி பைபர் படகில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார். 29-ம் தேதி காலை மீன்பிடித்துவிட்டு கரைக்கு திரும்பும்போது, அமில்டன் கடலில் தவறி விழுந்துவிட்டார். கடலோர காவல்படையினர் மற்றும் மீனவர்கள் கடலில் தேடிவந்த நிலையில், நேற்று காலை அமில்டன் உடல் கரையோரம் ஒதுங்கியது. கடலோர காவல் படை மற்றும் தட்டார்மடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.