Published : 02 May 2021 03:15 am

Updated : 02 May 2021 03:15 am

 

Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

மக்கள் அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி : பிரதமருக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா என்பதைப் பேரிடராகக் கருதி, போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு உரிய முடிவுகளை எடுத்திருக்க வேண்டும். ஏற்கெனவே 4 மாதங்கள் விரயமாகி உள்ளன. தடுப்பூசி உற்பத்தியை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதோடு, கூடுதலாக பலநிறுவனங்களுக்கு அந்த உரிமையை வழங்கியிருக்கலாம்.


அதன்மூலம் உற்பத்தியைப் பெருக்கியிருக்கலாம். நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மக்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசு அனைத்து மக்களுக்கும் இலவமாக தடுப்பூசி போடும் பொறுப்பை ஏற்க வேண்டும். தனியார் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்து, இதற்கான நிதியை ஏற்றுக் கொண்டு, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கி உடனடியாக தடுப்பூசி போட்டு கரோனாவின் பிடியில் சிக்கி உயிருக்காகப் போராடுகிற மக்களைப் பாதுகாக்க வேண்டும்.

இந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தைப் பிரதமர் மோடி புரிந்துகொண்டு, ஏற்கெனவே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.35 ஆயிரம் கோடிக்கு கூடுதலாக ரூ.7 ஆயிரம் கோடியை ஒதுக்கினாலே அனைத்து மக்களுக்கும் இலவசமாக மத்திய அரசு தடுப்பூசி போட முடியும். இதைச் செய்வதன் மூலம் இந்திய மக்களைக் காப்பாற்றுகிற பொறுப்பை பிரதமர் மோடி ஏற்க வேண்டும்.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x