Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

தோட்டக்கலை விவசாயிகளுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் :

நாகப்பட்டினம் : தமிழகத்தில் கரோனா தொற்று பரவலின் 2-ம் அலை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்களின் விளைபொருட்களான காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியவற்றை உள்ளூர், வெளியூர் மற்றும் பிற மாவட்டச் சந்தைகளுக்கு வாகனத்தில் கொண்டு செல்லும்போது, இடர்ப்பாடுகள் ஏதேனும் ஏற்பட்டால், உடனடியாக ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற எண்ணில் தொடர்புகொண்டு, தேவையான உதவியை பெறலாம் என ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x