

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று தொடர்பான தகவல்களை 'நம்ம தஞ்சை' என்ற செல்போன் செயலி வழி யாக அறிந்துகொள்ளலாம் என ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 'நம்ம தஞ்சை' என்ற செல்போன் செயலி உருவாக்கப் பட்டுள்ளது. இந்தச் செயலியில் தற்போது கரோனா தொற்று தொடர்பான விவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் சிறப்புப் பக்கம் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்பு பக்கத்தில், கரோனா தடுப்பூசி மையங்கள், மாதிரி சேகரிப்பு மையங்கள், கரோனா சிகிச்சை மையங்கள் உள்ளிட்டவை குறித்த விவரங்களை அறிந்துகொள்ளலாம். மேலும், இதில் கரோனா தடுப்பூசி குறித்து எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான தற் போதைய நிலை குறித்து அறியலாம். குறிப்பாக, கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகள், இல்லத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் நபர்கள், கரோனா மருத்துவமனைகளில் படுக்கை இருப்பு உள்ளிட்ட விவரங்களை உடனுக் குடன் தெரிந்துகொள்ளலாம்.
ஊரடங்கின்போது பொது மக்கள் பின்பற்ற வேண்டிய விதி முறைகள், தனிமைப்படுத்தல் தொடர்பான நெறிமுறைகள் குறித்தும், தினசரி தகவல்கள், ஒன்றிய கண்காணிப்புக் குழு தொடர்பான விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம். பயண அனுமதி பெற இ- பாஸ் லிங்க் பகிரப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் 24 மணிநேரமும் செயல் பட்டு வரும் கரோனா அவசர கட்டுப்பாட்டு மையத்தை 1077, 18004255451, 04362 - 230121 ஆகிய எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்ற விவரமும் பதிவு செய்யப் பட்டுள்ளது. எனவே, தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் ‘நம்ம தஞ்சை' செல்போன் செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் கரோனா தொற்று தொடர்பாக தற்போது பகிரப்பட்டுள்ள சிறப்புப் பக்கத்தில் தேவையான விவரங்களைப் பெறலாம் என தெரிவித்துள்ளார்.