

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட ஜின்னா ரோடு, காந்திரோடு, மார்க்கெட் பகுதி, புதுப்பேட்டை சாலை, திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையில் நகராட்சி அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.
அப்போது, ஜின்னாரோட்டில் உள்ள ஒரு கிடங்கில் ஆட்கள் அதிக அளவில் சென்று வருவது தெரியவந்தது.
அரசு விதிமுறைகளின்படி 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள வணிக நிறுவனங்களை மூட வேண்டும் என்பதை மறந்து பெரிய கிடங்கில் ஆட்கள் அதிக அளவில் இருந்ததை அறிந்த நகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்தியபோது அந்த கிடங்கில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மூட்டை, மூட்டையாக குவித்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
அதேபோல, கரோனா விதிமுறைகளை பின்பற்றாத 6 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்த நகராட்சி அதிகாரிகள் இது போன்ற தவறுகள் தொடர்ந்து ஏற்பட்டால் கடைகளுக்கு ‘சீல்' வைக்கப்படும் என எச்சரித்தனர்.