

திருவண்ணாமலை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள 31,070 பேருக்கு தபால் வாக்குகள், நாளை காலை 8 மணி வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு பணியில் சுமார் 15,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். மேலும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவருக்கும் தபால் வாக்குகள் வழங்கப்பட்டது.
நேரிடையாக அளிக்கலாம்
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 31,070 பேருக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட பெரும்பாலானவர்கள் வாக்குப்பதிவுக்கு முன்பாக தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதர துறைகளைச் சேர்ந்தவர்கள் அஞ்சல் துறை மூலமாக தபால் வாக்குகளை அனுப்பி வருகின்றனர்.
வாக்குகள் நிராகரிக்கப்படும்