

கோவை குரும்பப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(60). இவரது மனைவி மகேஸ்வரி(55). இவர்களின் மகன் பிரதீப்(33), மருமகள் பிரதீபா(31). இவர்கள் அனைவரும் ஆறுமுகத்தின் 2-வது மகனின் திருமண அழைப்பிதழை தாராபுரத்தில் வழங்கிவிட்டு, அங்கிருந்து காரில் கரூருக்கு நேற்று வந்துகொண்டி ருந்தனர். காரை பிரதீப் ஓட்டினார்.
சின்னதாராபுரத்தை அடுத்த சூடாமணி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, எதிர் பாராத விதமாக சாலையோரம் இருந்த மரத்தில் கார் மோதியது.
இதில், காரில் பயணம்செய்த 4 பேரும் படுகாய மடைந்து, கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரதீப், ஆறுமுகம், மகேஸ்வரி ஆகியோர் உயிரிழந்த னர். பிரதீபாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சின்னதாராபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.