

கல்லணைக் கால்வாயைபோல, தனி நிதி ஒதுக்கீடு செய்து வெண்ணாற்றையும் புனரமைப்பு செய்ய வேண்டும் என வெண் ணாறு–வடவாறு பாதுகாப்பு சங் கத்தைச் சேர்ந்த விவசாயிகள் பொதுப்பணித் துறை உயர் அலு வலர்களிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.
வெண்ணாறு–வடவாறு பாது காப்பு இயக்கத் தலைவர் தங்கமணி தலைமையில், செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் சுப்ரமணியன் உள்ளிட்ட 30 விவசாயிகள் தஞ்சாவூரில் உள்ள வெண்ணாறு செயற்பொறியாளர் அலுவலகத்தில், வெண்ணாறு உதவி செயற்பொறி யாளர் அய்யம்பொருமாளிடம் நேற்று மனு அளித்தனர்.
மனுவில் தெரிவித்துள்ளதாவது: வெண்ணாற்றில் தொடர்ந்து நடைபெறும் மணல் திருட்டை தடுக்க வேண்டும். வெண்ணாறு, வடவாற்றில் இருந்து பிரியும் வாய்க்கால்கள், மதகுகளை புனரமைப்பு செய்ய வேண்டும்.
வெண்ணாற்றில் மேலகளக்குடி, அண்ணாத்தோட்டம், தென்னஞ் சோலை போன்ற பகுதிகளில் தடுப்பணைகளை கட்டி, நீரை சேமிக்க வேண்டும். மேலும், கல்லணைக் கால்வாயை புனரமைப்பு செய்ய தனி நிதியாக ரூ.2,600 கோடி ஒதுக்கியதுபோல, வெண்ணாற்றை புனரமைப்பு செய்ய தனி நிதி ஒதுக்கீடு செய்து, வெண்ணாறு, வடவாற்றை முழுமையாக துார் வார வேண்டும். மண்மேடுகளை அகற்ற வேண்டும்.
வடவாறு புனித நதியாக விவசாயிகளால் பார்க்கப்படும் நிலையில், அதில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.