

திருப்பூர்: தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த திருப்பூர் இளைஞரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் மாநகர் அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது டிடிபி மில் சாலை. கடந்த பிப். 21-ம் தேதி சாலையில் நடந்து சென்றவரிடம், கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில், திருப்பூர் காந்தி நகரை சேர்ந்த சூர்யா (23) என்பவரை போலீஸார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை மிரட்டல், திருட்டு உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதையடுத்து, திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூர்யாவிடம் நேற்று போலீஸார் வழங்கினர்.