Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM

காரைக்காலில் பிற்பகல் 2 மணியுடன் மூடப்பட்ட வணிக நிறுவனங்கள் :

காரைக்கால்: புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், கடந்த 20-ம் தேதியிலிருந்து இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. மேலும், ஏப்.26-ம் தேதி முதல் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய கடைகள் தவிர மற்ற வணிக நிறுவனங்கள் பிற்பகல் 2 மணியுடன் மூடப்பட வேண்டும் என புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது. அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 2 மணியுடன் காய்கறி, மளிகை, பால், மருந்தகம், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் தவிர மற்ற கடைகள் மூடப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x