கொலை வழக்கில் கைதான ஐவர் மீது குண்டர் சட்டம் :

கொலை வழக்கில் கைதான ஐவர் மீது குண்டர் சட்டம் :
Updated on
1 min read

திண்டுக்கல் பால் வியாபாரி கொலை வழக்கில் தொடர்புடைய ஐந்து பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திண்டுக்கல் ஆட்சியர் உத்தரவிட்டார்.

திண்டுக்கல் அருகேயுள்ள பாலமரத்துப்பட்டியைச் சேர்ந்த பால் வியாபாரி முருகேசன். இவர் ஏப். 12-ம் தேதி இரவு ஒரு கும்பலால் திண்டுக்கல் மாலப்பட்டி பகுதியில் வெட்டிக்கொல்லப்பட்டார். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸார் வழக்குப்பதிந்து கொலையாளிகளைக் கைது செய்தனர்.

கொலையில் தொடர்புடைய மாலப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரன் (24), பாலசுப்பிரமணி (21), தங்கமணி (24), சந்தனகுமார் (22), கார்த்திகேயன் (23) ஆகிய ஐந்து பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., ரவளிப்பிரியா, திண்டுக்கல் ஆட்சியருக்குப் பரிந்துரைத்தார். இதையடுத்து ஐந்து பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in