

பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில், உலக மலேரியா தினத்தை முன்னிட்டு மலேரியா ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஏப்ரல் 25-ம் தேதி உலக மலேரியா தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதனையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் சுகாதாரத்துறை சார்பில் மலேரியா ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இளநிலை பூச்சியியல் அலுவலர்கள் கண்ணன், பாலசுப்பிரமணியன், நயினார்கோவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கே.ஏ. கிருஷ்ணசாமி, சுகாதார ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன் மற்றும் செவிலியர்கள் மற்றும் ஏராளமான கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் பங்கேற்றனர்.