திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த - 257 நெல் கொள்முதல் நிலையங்களும் மூடல் :

திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த -  257 நெல் கொள்முதல் நிலையங்களும் மூடல் :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் 2020-21-ம் நிதியாண்டில் காரீப் பருவத்துக்கான நெல் கொள்முதல் செய்வதற்கு 400 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.

சம்பா அறுவடை பணிகள் முடிவடைந்து, நெல்வரத்து குறைந்த கொள்முதல் நிலையங் கள் ஏற்கெனவே மூடப்பட்ட நிலையில், 257 கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில், திருவாரூர் வட்டத்தில் 22, நன்னிலத்தில் 41, குடவாசலில் 40, கூத்தாநல்லூரில் 13, திருத்துறைப்பூண்டியில் 42, மன்னார்குடியில் 48, நீடாமங்கலத்தில் 10, வலங் கைமானில் 41 என 257 நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் வரத்து இல்லாததால், அவற்றை உடனடியாக மூட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக திருவாரூர் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், கொள்முதல் தொடர் பான அனைத்து கணக்கு விவரங் கள், பணமதிப்பு ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை துணை மேலாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து கொள் முதல் நிலையங்களும் மூடப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in