

கோவில்பட்டி: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
நகராட்சி ஆணையாளர் ஓ.ராஜாராம் கூறும்போது, “நகராட்சி பகுதிகளில் தினசரி நடைபெறும் காய்ச்சல் பரிசோதனை முகாம், சளி பரிசோதனை முகாம்கள், கரோனா சிகிச்சை மையங்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ள நகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இந்த அலுவலகத்தை 04632-220925 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பொதுமக்கள் தகவல்கள் பெறலாம்” என்றார்.