Published : 26 Apr 2021 03:18 AM
Last Updated : 26 Apr 2021 03:18 AM
ஆம்பூரில் கரோனா கட்டுப்பாட்டு அறை விரைவில் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு நாளான நேற்று நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட கரோனா தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் பெருகி வரும் கரோனா பரவலை தடுக்கவும், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் ஆம்பூர் வர்த்தக மையத்தில் விரைவில் கரோனா கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட உள்ளது. நகராட்சி, வருவாய் துறை, கிராம ஊராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் கரோனா கட்டுப்பாட்டு அறையில் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்பு கொள்ள தொடர்பு எண் விரைவில் அறிவிக்கப்படும்.
கரோனா பரவலை தடுக்க ஆம்பூர் நகராட்சி சார்பில் 14 குழுக்கள் நேற்று முன்தினம் இரவு முதல் நகரம் முழுவதும் தூய்மைப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளி, ஆம்பூர் தக்ஷிலா பள்ளிகளில் கரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தும் சிறப்பு மையங்கள் திறப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கெனவே, கே.ஏ.ஆர். பாலிடெக்னிக் கல்லூரி வளாகம், உமராபாத் ஜாமியா கல்லூரி வளாகத்தில் கரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. கரோனா நோயாளிகளிடம் முதன்மை தொடர்பில் உள்ளவர் கள் உடனடியாக கண்டறியப் பட்டு அவர்கள் சிறப்பு தனிமைப் படுத்தும் மையங்களில் தனிமைப் படுத்தப்பட்டு வருகின்றனர்.
முதன்மை தொடர்பில் உள்ள வர்களை முதலில் கண்டறிந்து அவர்களையும், அவர்களுடைய குடும்பத்தாரையும் தனிமைப் படுத்தினால் கரோனா பரவலை எளிதாக தடுத்து விடலாம் என் பதால் இந்த முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால், அந்தப் பணியில் அரசுஅலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிகள் போதுமான அளவுக்கு இருப்பு உள்ளது. பொது மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம். ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளி களுக்கு உரிய சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் ஆம்பூர் பஜார் பகுதியில் கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது’’என்றார். அப்போது, ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் சவுந்திரராஜன், ஆம்பூர் வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணன், சுகாதார அலுவலர் பாஸ்கர், ஆம்பூர் வர்த்தக மைய நிர்வாகிகள் முஹம்மத் அலி, பிர்தோஸ்அகமத், ஆம்பூர் ஜமாத்தை சேர்ந்த தாஹா முகமத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT