

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரடங்கு நாளில் விதிமீறி இறைச்சி விற்பனை செய்த கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
கரோனா பரவல் தடுப்பு காரண மாக முழு ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. கரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
திருப்பத்தூர் நகராட்சி சார்பில் நகரம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தூய்மைப்பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர். முக்கியச்சாலைகள் மற்றும் தெருக்களில் மாஸ் கிளீனிங் நேற்று நடைபெற்றது. கரோனா ஊரடங்கு நாளில் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடியிருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், திருப்பத்தூர் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் பல இடங்களில் மறைமுகமாக இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெற்றது.
இது குறித்து வந்த தகவலின் பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேகானந்தன் மற்றும் பணியாளர்கள் திருப்பத் தூரில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது புதுப்பேட்டை, வீட்டு வசதி வாரியம் பகுதிகளில் கோழிஇறைச்சி விற்பனை செய்த 4 கடைகளுக்கு நகராட்சி அதிகாரி கள் 'சீல்' வைத்தனர். அங்கிருந்த 80 கிலோ இறைச்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தவிர அரசு மருத்துவ மனை அருகே இருந்த உணவகத் தில் விதிமீறி கூட்டமாக இருந்த தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப் பட்டது. பொது ஊரடங்கு நாளில் தேவையின்றி ஊர் சுற்றுபவர்களை தடுக்க நகர பகுதியின் பல இடங்களில் காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.