Published : 26 Apr 2021 03:19 AM
Last Updated : 26 Apr 2021 03:19 AM
ரெம்டெசிவிர் மருந்து, உயிர் காக்கும் மருந்து இல்லை. இதை மருத்துவர்கள், நோயாளிகளிடம் தெரியப்படுத்த வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தற்போதைய நிலையில் ஒரு லட்சத்துக்கும் மேற் பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கரோனா தொற்றுக்கு `ரெம்டெசிவிர்' என்ற மருந்து பயனளிப்பதாகக் கூறி, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்தை, மருத்துவர்கள் பரிந்துரை செய்துவருகின்றனர். பல தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்து இருப்பு இல்லாததால், வெளியில் இருந்து மருந்தை வாங்கி வருமாறு உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டை வைத்துக்கொண்டு, ரெம்டெசிவிர் மருந்துக்காக மக்கள் கடை கடையாக அலைந்து வருகின்றனர்.
இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறும்போது, ‘‘உலக சுகாதார நிறுவனம், ரெம்டெசிவிர் மருந்து உயிரைக் காப்பாற்றக் கூடியது இல்லை என தெரிய வந்துள்ளது. மேலும், கரோனாவுக்கு இந்த மருந்தைப் பரிந்துரைக்கவும் இல்லை.
அதேசமயம், ரெம்டெசிவிர் மருந்து ஆன்டி வைரல் மருந்தாகும். இதை எடுத்துக் கொள்வதால், மருத்துவமனைகளில் நோயாளி கள் சிகிச்சைபெறும் காலம் மட்டுமே குறையும். எனவே, அனைவருக் கும் ரெம்டேசிவிர் மருந்து தேவைப் படாது.
தனியார் மருத்துவமனைகள் தங்களிடம் ரெம்டேசிவிர் மருந்து இல்லை என்றால், அதை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்க வேண்டாம். எனினும், அவசியத் தேவை ஏற்பட்டால், மருத்துவமனைகள் வாயிலாக தமிழக மருத்துவப் பணிகள் கழகத்தை தொடர்புகொண்டு, நோயாளியின் விவரத்தை அளிக்கும்பட்சத்தில் ஒரு டோஸ் மருந்து ரூ.783-க்கு வழங்கப்படும்.
எனவே, பொதுமக்கள் ரெம்டெசிவிர் மருந்துக்கு அலைய வேண்டாம். மருத்துவர்களும், ரெம்டெசி விர் மருந்து குறித்து நோயாளி களுக்குத் தெரியப்படுத்த வேண் டும். அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவுக்கு மருந்துகள் கையிருப்பில் உள்ளன.’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT