விழுப்புரம் மாவட்ட விதைப்பண்ணைகளில் ஆய்வு :

விழுப்புரம் அருகே காவணிப்பாக்கம் கிராமத்தில் உள்ள எள் விதைப்பண்ணை ஆய்வு செய்யப்படுகிறது.
விழுப்புரம் அருகே காவணிப்பாக்கம் கிராமத்தில் உள்ள எள் விதைப்பண்ணை ஆய்வு செய்யப்படுகிறது.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்ட விதைப் பண்ணைகளில் அங்ககச்சான்று இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பாண்டிற்கு நெல், உளுந்து,மணிலா, எள் போன்ற பல்வேறு பயிர்களுக்கு விதைப்பண் ணையில் சாகுபடி செய்யும் பரப்பு 3,600 ஹெக்டராக நிர்ணயிக் கப்பட்டது.

இதில், ஏப்ரல் மாதத்தில் 130 ஹெக்டர் சாகுபடி செய்யப்பட்டது. மேலும், விதைகளை சான்று செய்யும் இலக்கு 6,665 டன் நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 220 டன் சான்று செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோலியனுார் அடுத்த காவணிப்பாக்கம் கிராமத்தில் 2.50 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள எள் பயிர்விதைப்பண்ணையை, கோவைவிதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குநர் சுப்பையா ஆய்வு செய்தார்.

அப்போது களப்பணியாளர்க ளுக்கு தொழில்நுட்ப அறிவுரைகளை வழங்கினார்.

மேலும், விழுப்புரம் விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் விதைச்சான் றளிப்புத்துறை மூலம் செயல் படுத்தப்படும் அனைத்து திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற் கொண்டார்.

அப்போது, விதை ஆய்வு துணை இயக்குநர் (பொறுப்பு) சோமு, விதைச்சான்று உதவி இயக்குநர் கதிரேசன் உடனிருந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பாண்டிற்கு விதைப்பண்ணையில் சாகுபடி செய்யும் பரப்பு 3,600 ஹெக்டராக நிர்ணயிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in