கரோனா 2-வது அலையை அலட்சியமாக நினைக்காதீர்கள் - தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் : கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவுரை

கள்ளக்குறிச்சி கடைவீதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் கிரண் குராலா.
கள்ளக்குறிச்சி கடைவீதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் கிரண் குராலா.
Updated on
1 min read

கரோனா தொற்று 2-வது அலையைஅலட்சியமாக எடுத்துக்கொள் ளாமல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தேவை யற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என கள்ளக்குறிச்சி ஆட்சியர் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக் காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கி றது.

இ்ந்த நிலையில் ஆட்சியர் கிரண்குராலா நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி கடைவீதி, கள்ளக்குறிச்சி - சேலம் சாலை, காய்கறிமார்க்கெட், பேருந்து நிலையம்,திருமண மண்டபம் ஆகிய பகுதிகளில் கரோனா வழிகாட்டுநெறிமுறைகள் பின்பற்றப்படுகி றதா? என ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியது:

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத கடைகளின் உரிமையாளர்களுக்கு கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் அபராதம்விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைக்கு வரும் வாடிக்கையா ளர்களை கண்டிப்பாக முகக்கவசம் அணிய கடை உரிமையாளர்கள் வலியுறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், பொதுமக்கள் கரோனாதொற்று 2-வது அலையைஅலட்சியமாக எடுத்துக்கொள்ளா மல் அரசின் வழிகாட்டு நெறி முறைகளை கடைபிடித்து தேவை யற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்.

அத்தியாவசிய தேவைமற்றும் பணிகளுக்காக மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும். அவ்வாறு வெளியே வரும் பட்சத்தில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்.

மேலும், தனிமனித இடை வெளியை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே மாவட் டத்தில் 100 சதவீதம் கரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in