பெண்ணிடம்  : நகை பறிப்பு :

பெண்ணிடம் : நகை பறிப்பு :

Published on

தேனி அருகே காமாட்சிபுரம் அய்யனார்கோயில் தெருவைச் சேர்ந்த ஆண்டவர் மனைவி பொற்செல்வி(52). இரவில் காற் றுக்காக வீட்டுக் கதவை திறந்து வைத்துக் கொண்டு ஹாலில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் கழுத்தில் கிடந்த செயினை யாரோ இழுப்பது போல இருந்தது. அதை தடுக்க முயற்சித்தார். எனினும் கண் இமைக்கும் நேரத்தில் 2 பவுன் செயினை பறித்துக் கொண்டு மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். ஓடைப்பட்டி போலீஸார் விசா ரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in