Published : 24 Apr 2021 03:15 AM
Last Updated : 24 Apr 2021 03:15 AM

கடலூர் அருகே உளுந்து விதைப் பண்ணையில் விதைச்சான்று இணை இயக்குநர் ஆய்வு :

கடலூர் அருகே மதலப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள உளுந்துவிதைப்பண்ணையில் விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று துறை இணை இயக்குநர் ஜெ.மல்லிகா நேற்று ஆய்வு செய்தார்.அப்போது விதைச்சான்று அலுவ லர்கள் விதைப்பண்ணைகளில் உள்ள கலவன் நீக்கம் பற்றி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்குவ தோடு இல்லாமல், அதிக மக சூலுடன் கூடிய தரமான விதை உற்பத்தி தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண் டும் என அறிவுரை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து கடலூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தின் கிடங்கில் விதை இருப்பு, பதிவேடுகள், பராமரிப்பு ஆகிய வற்றை ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்கினார். கடலூர் வட்டார வேளாண் உதவிஇயக்குநர் பூவராகன் உடனிருந் தார்.

தொடர்ந்து நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற் கொண்டார். விதை விற்பனை சட்டங்களின்படி உரிய வழிமுறை களை பின்பற்றிட விதை விற்பனை மைய உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். விதைச்சேமிப்பு கிடங்குகளையும் ஆய்வு செய்தார்.

கள ஆய்வுகள் முடித்த பின்னர்கடலூர் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண் டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் கடலூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் பிரேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது நல்ல மகசூலுக்கு நல்ல விதையே ஆதாரம். எனவே துறை சார்ந்த அலுவலர்கள் வயல் மற்றும் விதை தரம் சார்ந்த பணிகளை முறையாக செய்ய வேண்டும் எனவும், அங்கக விவசாயத்தினை விவ சாயிகளிடம் பிரபலமடையச் செய்ய வேண்டும் எனவும் திட்ட இலக்குகளை விரைவாகவும் முழுமையகாவும் முடித்திடவும் அறிவுரை வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x