குண்டர் சட்டத்தில் இருவர் கைது :

குண்டர் சட்டத்தில் இருவர் கைது :
Updated on
1 min read

ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த சவுந்திரபாண்டி(45) கஞ்சா விற்று வந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.சத்திரப்பட்டி கோபாலபுரத்தைச் சேர்ந்த வில்சன்குட்டிபாபு (46). இவர் மீது அனுமதியின்றி துப்பாக்கியை வனவிலங்கு களை வேட்டையாடும் நோக் கத்தில் வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவர்கள் இருவரையும் குண் டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா ஆட்சி யருக்குப் பரிந்துரைத்தார்.

இதையடுத்து ஆட்சியர் மு.விஜயலட்சுமி உத்தரவின் பேரில் சவுந்திரபாண்டி, வில்சன்குட்டி ஆகிய இரு வரையும் போலீஸார் குண்டர் சட்டத்தில் கைதுசெய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in