செங்கோட்டையில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.
செங்கோட்டையில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.

செங்கோட்டையில் புத்தகக் கண்காட்சி :

Published on

உலக புத்தக தினத்தை புத்தகங்களோடு கொண்டாடும் விதமாக செங்கோட்டை நூலக வாசகர் வட்டம், கபிலர் கலை இலக்கிய மன்றம், தமிழ்நாடு அறிவியல் கழகம், பாரதி புத்தகாலயம் ஆகிய அமைப்புகள் சார்பில் செங்கோட்டை காந்தி சிலை அருகில் புத்தக கண்காட்சி நடைபெற்றது.

செங்கோட்டை நூலகர் கோ.ராமசாமி வரவேற்றார். விழுதுகள் அறக்கட்டளை நிர்வாகி சேகர் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் கழக மாவட்டச் செயலாளர் சுரேஷ்குமார், செங்கோட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தண்டமிழ்தாசன் பா.சுதாகர், துணைத் தலைவர் ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செங்கோட்டை நகராட்சி ஆணையர் நித்யா புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். வட்டாட்சியர் ரோஷன் பேகம் முதல் புத்தக விற்பனையை தொடங்கி வைத்தார். வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன், மைதீன் பிச்சை, எம் முருகேசன், ராஜீவ்காந்தி, மல்லிகா, சமூக ஆர்வலர் வேல்மயில் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். கபிலர் கலை இலக்கிய மன்றத் தலைவர் பால்ராஜ் நன்றி கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in