

அவிநாசியில் தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி வ.உ.சி. காலனியில் வசிப்பவர் ரங்கசாமி (60). இவரது மனைவி மகேஸ்வரி (53). இவர்களது மகன் அருண் ராயப்பன் (30). கணவர் நேற்று காலை வெளியே சென்றிருந்த நிலையில், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த தாய் மகேஸ்வரியும், திருமணமாகாத மகன் அருண் ராயப்பன் ஆகிய இருவரும் தனித்தனி அறையில்தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதுதொடர்பாக அருகே வசிப்பவர்கள் அளித்த தகவலின்பேரில் அவிநாசி போலீஸார்சென்று, இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.