

சிதம்பரத்தில் நீதிமன்ற ஊழியர் வீட்டில் 5 பவுன் நகை,பணம் திருடப்பட்டது.
சிதம்பரம் எடத்தெரு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் காட்டுமன்னார்கோவில் நீதிமன்றத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சிதம்பரம் நீதிமன்றத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலை சென்றுள்ளனர். மாலை பணி முடிந்து வேல்முருகன் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.இதுகுறித்து வேல்முருகன் சிதம்பரம் நகர போலீஸில் புகார் செய்தார்.
அதில் அந்த பகுதியை சேர்ந்த 2 பெண்கள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இவரது மனைவி சிதம்பரம் நீதிமன்றத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.