காரியாபட்டியில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய  தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ.
காரியாபட்டியில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ.

மல்லாங்கிணர், காரியாபட்டியில் திமுக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம் :

Published on

கரோனா தொற்றின் 2-வது அலை பரவிவரும் நிலையில் திமுகவினர் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, மல்லாங்கிணரில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வை, திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார். காரியாபட்டியிலும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

திமுக தேர்தல் பொறுப்பாளர் நல்லசேதுபதி, பேரூர் செயலாளர் செந்தில், ஒன்றியச் செயலாளர்கள் செல்லம், கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தமிழ்வாணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in