

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே செங்கப்படுத் தான்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் காந்திமதி. கூலித் தொழிலாளி. இவரது மகன் தினேஷ்(25), கடந்த 2019-ம் ஆண்டு சவுதி அரேபி யாவுக்குச் சென்றார்.
இவரிடம் சவுதி அரேபி யாவுக்கான ஓட்டுநர் உரிமம் இல்லாத நிலையில், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஜல்லிக் கற்களை ஏற்றிச் செல்லும் லாரியை ஓட்டி வந்தார்.
இந்நிலையில், அங்கு தினேஷ் ஓட்டிய லாரி விபத்துக்குள்ளாகி, சவுதி அரேபியர் ஒருவர் உயிரிழந்ததால், சவுதி அரேபிய போலீஸாரால் தினேஷ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக் கப்பட்டார்.
இதையடுத்து, தனது மகனை சிறையிலிருந்து மீட்டுத் தரும்படி தஞ்சாவூர் ஆட்சியர், தொகுதி எம்.பி பழநிமாணிக்கம் உள்ளிட்டோரிடம் கடந்த 20.1.2020-ல் காந்திமதி மனு அளித்தார். இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கப் படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, தனது மகனை மீட்டுத் தரும்படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவிடம் காந்திமதி நேற்று முன்தினம் மீண்டும் மனு அளித்தார்.