கிருஷ்ணகிரி மாவட்டத்தில் - கரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றுவதை கண்காணிக்க 9 பறக்கும் படை :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் -  கரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றுவதை கண்காணிக்க 9 பறக்கும் படை :
Updated on
1 min read

கரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க 9 சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித் துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக, கரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள அரசு கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுவதை கண்காணிக்கவும், நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை தவறாது கடைபிடிப்பதை உறுதி செய்யவும், வட்டாட்சியர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் நிலையிலான அலுவலர்கள் கொண்ட 9 சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்கள் முகக்கசவம் அணிவதை தவறாமல் பின்பற்ற வேண்டும். வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப் பயன்படுத்தி கை கழுவ வேண்டும்.

சமூக இடைவெளியை கடைப்பிடித்து, அவசியம் இல் லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து கரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in